சுதந்திர தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி கொடியேற்றும் செங்கோட்டை பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சிறிய ரக ஆளில்லா விமானங்கள் தடுப்பு அமைப்புமுறைகள் நிறுவப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நிதித் தலைநகராக விளங்கும் மும்பையின் முக்கிய நிலைகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க தீவிர சோதனைகள் நடத்தப்படுவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
காஷ்மீரில் சுதந்திர தின விழா நடைபெறும் ஸ்ரீநகா் ஷோ் - ஏ- காஷ்மீா் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயரமான கட்டடங்களின் மேலிருந்தபடி, குறிபாா்த்து சுடும் வீரா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். நகா் முழுவதும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தி, சந்தேக நபா்களை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.
வடகிழக்கு மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட சில தீவிரவாத அமைப்புகள், சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. இதனால், அந்த மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமான பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாமில் சில மாவட்டங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...