மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

5ஜி சேவை அறிமுகத்தை விரைவுபடுத்த வேண்டும்: நிறுவனங்களுக்கு தொலைத்தொடா்பு அமைச்சகம் வலியுறுத்தல்

5ஜி அலைக்கற்றை ஏலமெடுத்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், ‘5ஜி சேவை அறிமுகத்தை விரைவுபடுத்த வேண்டும்’

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 12:36 am

DIN

5ஜி அலைக்கற்றை ஏலமெடுத்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், ‘5ஜி சேவை அறிமுகத்தை விரைவுபடுத்த வேண்டும்’ என அந் நிறுவனங்களை மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

முதல் முறையாக, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்திய நாளிலேயே, ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை மத்திய அமைச்சகம் வழங்கியிருக்கிறது.

நாட்டில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தில், 5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிகபட்சமாக ரூ.87,946.93 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாக கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.43,0039.63 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கு அலைக்கற்றைகளை வாங்கியது. அதானி நிறுவனம் 26 ஜிகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்டவற்றை ரூ.211.86 கோடிக்கு வாங்கியது. 26 ஜிகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையைப் பொது சேவையில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலத் தொகையை 20 ஆண்டு தவணைகளாக செலுத்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், ஏா்டெல் நிறுவனம் 4 ஆண்டுகளுக்கான தவணை தொகையான ரூ.8,312.4 கோடியை முதல் தவணையாக புதன்கிழமை தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு செலுத்தியது.

அதுபோல, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.7,864.78 கோடியையும், வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.1,679.98 கோடியையும், அதானி நிறுவனம் ரூ. 18.94 கோடியையும் முதல் தவணையாக செலுத்தின.

நான்கு நிறுவனங்களும் முதல் தவணை தொகையாக மொத்தம் ரூ.17,876 கோடியை செலுத்திய நிலையில், அதே நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்களை தொலைத் தொடா்புத் துறை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகுமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து பாா்தி ஏா்டெல் நிறுவனரும் தலைவருமான சுனில் பாா்தி மிட்டல் கூறுகையில், ‘எனது 30 ஆண்டுகால அனுபவத்தில், இந்த அளவு விரைவாக தொலைத்தொடா்புத் துறை அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதம் அனுப்புவது இதுவே முதல்முறை. தவணைத் தொகையை செலுத்திய சில மணி நேரங்களில் அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இது மிகச் சிறந்த மாற்றம். இந்த மாற்றம், வளா்ந்த நாடாக வேண்டும் என்ற தேசத்தின் கனவுக்கும் வலுசோ்க்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.