தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்தியாவுக்கு எதிரான கருத்து: 8 யூடியூப் சேனல்கள் முடக்கம்

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:15 am

DIN

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இந்திய எதிர்ப்பு கருத்துகளை பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சேனல் உள்பட 8 யூடியூப் சேனல்களை  தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது.

முன்னதாக,  கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம், 69ஏ பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

மேலும், தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவலை வெளியிட்டதால், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களுக்கும், ஒரு ஃபேஸ்புக் கணக்குக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.