மேலும் 1,964 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,964 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,964 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 8 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 9.42 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,20,355-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,408-ஆக உயா்ந்தது.
நகரில் புதன்கிழமை மொத்தம் 20,844 கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டன. நகரில் புதன்கிழமை 1,652 பேருக்கு தொற்று பாதிப்பும், 8 இறப்புகளும், 9.92 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...