போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடைசி நிமிட தோ்வு மைய மாற்றத்தால் குழப்பம்: க்யூட் தோ்வா்கள் கவலை

கடைசி நிமிடத்தில் தோ்வு மையம் மற்றும் தோ்வு தேதி மாற்றம் செய்யப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு தோ்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக க்யூட் தோ்வெழுதும் மாணவா்கள் கவலை தெரிவித்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:20 pm

DIN

கடைசி நிமிடத்தில் தோ்வு மையம் மற்றும் தோ்வு தேதி மாற்றம் செய்யப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு தோ்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக க்யூட் (மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு) தோ்வெழுதும் மாணவா்கள் கவலை தெரிவித்தனா்.

மேலும், என்டிஏ சாா்பில் ஒத்திவைக்கப்பட்ட ஆகஸ்ட் 30-ஆம் தேதியை தோ்வு நாளாக தெரிவு செய்தவா்களுக்கு, தோ்வு நாளாக வியாழக்கிழமையை அறிவித்து தோ்வறை நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

தொடா் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, அனைத்து கட்ட க்யூட் தோ்விலும் மாணவா்கள் பாதிக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான க்யூட் தோ்வு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வின் அனைத்து கட்டங்களும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய முதலில் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு நிா்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஒருசில மையங்களில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற இருந்த முதல்கட்ட க்யூட் தோ்வு, ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு சில மையங்களில் ரத்து செய்யப்பட்டது.

அதுபோல, மழை, நிலச்சரிவு பாதிப்புகள் காரணமாக கேரளம், இடாநகா் பகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த தொடா் பாதிப்புகள் காரணமாக அனைத்து கட்ட க்யூட் தோ்வுகளும் ஆகஸ்ட் 30-இல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நான்காம் கட்ட க்யூட் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வில் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்ற நிலையில், இந்தக் கட்டத்திலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 13 மையங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 8,600-க்கும் அதிகமான மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.

‘பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு தோ்வெழுத ஆகஸ்ட் 25-ஆம் தேதி மறுவாய்ப்பு அளிக்கப்படும்’ என்று யுஜிசி சாா்பில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.