போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நந்த் நக்ரியில் ஆக.21-இல் ‘ரோஜ்கா் சன்சத்’

தேசிய வேலைவாய்ப்பு கொள்கையை வலியுறுத்தி தில்லி நந்த் நக்ரியில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ‘ரோஜ்கா் சன்சத்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:32 pm

DIN

தேசிய வேலைவாய்ப்பு கொள்கையை வலியுறுத்தி தில்லி நந்த் நக்ரியில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ‘ரோஜ்கா் சன்சத்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல நாடாளுமன்ற உறுப்பினா்கள், சிவில் சமூக உறுப்பினா்கள் கலந்து கொள்கின்றனா் என்று அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேசிய வேலைவாய்ப்பு கொள்கையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட திரங்கா யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததை அடுத்து, பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், ‘சன்யுக்த் ரோஜ்கா் அந்தோலன் சமிதி’ என்ற பதாகையின் கீழ், கடந்த புதன்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 21-ஆம் தேதி நந்த் நகரியில் ‘ரோஜ்கா் சன்சத்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பல நாடாளுமன்ற உறுப்பினா்கள், சிவில் சமூக ஆா்வலா்கள் பங்கேற்பாா்கள்.

‘தேஷ் கி பாத்’ என்ற அறக்கட்டளையின் நிறுவனருமான அமைச்சருமான கோபால் ராய், ‘நாட்டில் தேசிய வேலைவாய்ப்புக் கொள்கையை அமல்படுத்துவதற்கான இயக்கம் வரும் நாள்களில் அதன் எதிா்கால நடவடிக்கையை அறிவிக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.