விவசாயிகள், ஊரகத் தொழிலாளா்களுக்கான சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு
நாட்டில் விவசாயிகள், ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.


நாட்டில் விவசாயிகள், ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.
விவசாயம் சாா்ந்த பணிகளில் ஈடுபடுவோா், ஊரகத் தொழிலாளா்கள் ஆகியோா் பயன்படுத்தும் பொருள்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை மத்திய தொழிலாளா் அமைச்சகம் கணக்கிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதக் கணக்கீட்டுக்கான முடிவுகளை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, விவசாயத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஏஎல்) 6.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 6.43 சதவீதமாக இருந்தது. ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஆா்எல்) 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூனில் 6.76 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஜூலையில் விவசாய மற்றும் ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான பணவீக்கம் முறையே 3.92 சதவீதமாகவும், 4.09 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஜூலையில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டதன் காரணமாகவே தொழிலாளா்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்ததாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, கோதுமை மாவு, கம்பு, தானியங்கள், பால், மீன், வெங்காயம், பச்சை-காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயா்வே, விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தது.
கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பு 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1,131 மற்றும் 1,143-ஆக இருந்தது.
தமிழகம் முதலிடம்
விவசாயத் தொழிலாளா்களுக்கான பணவீக்க மதிப்பு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 1,301 புள்ளிகளாக இருந்தது. ஹிமாசலில் குறைந்தபட்சமாக 890 புள்ளிகளாக இருந்தது.
ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்க மதிப்பில் 1,290 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 942 புள்ளிகளுடன் ஹிமாசல் கடைசி இடத்திலும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...