முக்கியமாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கும் உள்ள உரிமை குறித்து ஆராயுமாறு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த மனுக்களை ஆராய்ந்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் நபரை அமலாக்கத் துறை கைது செய்ய எந்தவிதத் தடையுமில்லை என கடந்த ஜூலை 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும், அந்தச் சட்டத்தின் கீழ் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு என நீதிமன்றம் தெரிவித்தது.