தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கள்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்து நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி நேற்று முதலே உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தில்லி நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
விவசாயிகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதையடுத்து தில்லி-மீரட் சாலை, காஸிப்பூர் எல்லை, சிங்கு எல்லை உள்ளிட்ட பகுதிகளை காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பே இந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிக்க | தில்லி கலால் முறைகேடு: 8 பேருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சிற்றம்பலத்தில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றவா் கைது

மண்டல விளையாட்டுப் போட்டிகள்: சாத்தான்குளம் ஜோசப் பள்ளி முதலிடம்

பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 2 பெண்கள் காயம்

காவிரி - வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிரசார பயணம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


