தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

11 குற்றவாளிகளும் விடுதலை: பில்கிஸ் பானு கிராமத்திலிருந்து தெறித்து ஓடும் மக்கள்

குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்புக் காரணங்களால், ரந்திக்பூர் கிராம மக்கள் ஊரை காலி செய்து வருகிறார்கள் என்கிறது தகவல்கள்.

News image
விடுதலையான 11 குற்றவாளிகள்
Updated On :24 ஆகஸ்ட் 2022, 12:06 pm

DIN

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்புக் காரணங்களால், ரந்திக்பூர் கிராம மக்கள் ஊரை காலி செய்து வருகிறார்கள் என்கிறது தகவல்கள்.

ரந்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் மக்கள் குடும்பம் குடும்பமாக ஊரை காலி செய்து கொண்டு வேறு ஊர்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் அருகிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், ரந்திக்பூர் கிராமத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அச்சம் காரணமாக கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறுவதை தடை செய்ய முடியவில்லை.

இது குறித்து தற்போது கிராமத்தில் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூறுகையில், தற்போது 50 குடும்பங்கள்தான் கிராமத்தில் இருக்கிறோம். மற்றவர்கள் குடும்பத்துடன் அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்றுவிட்டார்கள். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், அவர்கள் கிராமத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபடுவார்களோ என்ற அச்சத்தில் ஏராளமானோர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த மாவட்ட ஆட்சியரிடம், குற்றவாளிகளை சிறையில் அடையுங்கள். எங்களது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்கிறார்கள் ஒரேக் குரலில்.

இது குறித்து காவல்துறை தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விடுதலையானவர்கள் யாரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. எனினும் பயம் காரணமாக சிலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளது உண்மைதான். தொடர்ந்து கிராம மக்களுடன் காவல்துறையினர் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். மேலும் பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொடூரமாக கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதனை மும்பை உயா் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனா். இதனையடுத்து அவா்களது தண்டனை குறைப்பு மனுவை பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனடிப்படையில், இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 ஆயுள் தண்டனை கைதிகளும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இவா்களுடைய விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் மற்றும் வழக்குரைஞா் அபா்னா பட் ஆகியோா், ‘குற்றவாளிகள் எதனடிப்படையில் விடுவிக்கப்பட்டனா் என்பதற்கு எதிராக மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து அல்ல’ என்றனா். இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புக்கொண்டனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.