காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

இஸ்லாமாபாத்தில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை!

பாகிஸ்தானின் கோசார் நகரில் சிறுமி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:39 pm IST

பாகிஸ்தானின் கோசார் நகரில் சிறுமி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மர்தான் பகுதியைச் சேர்ந்த, சிறுமியின் தந்தை கிருபா தனது ஏழு வயது மகள் அவரது தாய், பாட்டி, சகோதரியுடன் பக்கத்து வீட்டிற்குச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் அவளைக் காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், குர்ஆன் கவானியில் கலந்துகொண்ட தங்கள் அண்டை வீட்டு மாடியிலிருந்து எரிக்கப்பட்ட துர்நாற்றம் வருவதையடுத்து குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது எரிந்த கட்டிலைக் கண்டனர். 

இதையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள கட்டுமானத்தின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது தங்கள் மகளின் எரிந்த உடல் தண்ணீர் தொட்டியில் கிடப்பதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த கிருபா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்துறையினர், கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்வதற்காக உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்பட நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையாளிகள் சில மணி நேரத்தில் கைது செய்யப்படுவர் என்று போலீசார் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.