நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்
தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி விடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்தனர். எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, ராஜா சிங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்வதாக அறிவித்தது. மாநில அரசும், காவல் துறையும் பிரச்னைகளை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் அவதூறாகப் பேசி விடியோ பதிவிட்டுள்ளார். இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து ராஜா சிங் மீது கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ராஜா சிங்கை காவல் துறையினர் தங்கள் காவலில் எடுக்க வேண்டும். அவரது குரலை ஆய்வுக்கு உட்படுத்தி விடியோவில் பேசியதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும். இதன் மூலம் ராஜா சிங் மீதான குற்றச்சாட்டு வலுவடையும். இது போன்று முட்டாள் தனமாக பேசுவது இதுவே அவர்களுக்கு கடைசியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

