உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

40 எம்.எல்.ஏ.க்களிடம் விலை பேச பாஜக திட்டம்: ஆம் ஆத்மி தலைவர் குற்றச்சாட்டு

பாஜக 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் திலீப் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

திலீப் பாண்டே

Published On :1 பிப்ரவரி 2024, 3:39 pm IST

பாஜக 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் திலீப் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை செய்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜகவிலிருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய் வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் நேற்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய, ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரனா திலீப் பாண்டே ‘பாஜக தில்லியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. முதலில் 4 பேரிடம் பேரம் பேசிய பிறகு மேலும் 40 எம்எல்ஏக்களை விலை பேச பாஜக முயன்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தில்லியில் ஆம் ஆத்மியிடம் 62 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 8 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

தில்லியில் பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றால் பாஜவிற்கு இன்னும் 28 எம்எல்ஏக்கள் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.