சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பெகாஸஸ் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு

பெகாஸஸ் உளவு வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:32 am

DIN


பெகாஸஸ் உளவு வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

தொழில்நுட்ப நிபுணர் குழுவானது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

குழுவின் அறிக்கை குறித்து நீதிபதிகள் கூறியதாவது:

“குழுவின் அறிக்கை மூன்று பாகங்களாக சமர்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகம் தொழில்நுட்பக் குழுவும், ஒரு பாகம் நீதிபதியும் சமர்பித்துள்ளார். அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியமாக வைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட 29 செல்போன்களில் 5 செல்போன்களில் உளவு பார்த்ததற்கான செயலி இருந்ததாகவும், ஆனால் அது பெகாசஸ் மென்பொருளுக்கு சம்பந்தப்பட்ட உளவு செயலிகள் என்று அறிக்கையில் குறிப்பிடவில்லை.

விசாரணையின்போது மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இணைய பாதுகாப்பை மேம்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவும், உளவு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வழிமுறைகளை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளனர்.”

அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பிறகு கருத்து தெரிவிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.