புதுதில்லி: காங்கிரஸ் யூடியூப் சேனல் புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், "இதற்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது நாசவேலை காரணம் என விசாரணை நடத்தி வருகிறோம்" என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்க பதிவில், "எங்கள் யூடியூப் சேனல் - 'இந்திய தேசிய காங்கிரஸ் எனும் எங்களது யூடியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்களும் அதை சரிசெய்து வருகிறோம். மேலும், கூகுள் மற்றும் யூடியூப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளோம்".
இதையும் படிக்க | மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு
மேலும், "இதற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையை என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் திரும்பி வருவோம்" என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளையராஜா இசைக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி குரல்!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 2 2026) 12 ராசிகளுக்கும்! வெற்றி யாருக்கு?

பதவி உயர்வு யாருக்கு? இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 02)

பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



