எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! என்எஸ்டிஎல் இயக்குநர் வாழ்த்து
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு என்எஸ்டிஎல் மேலாண் இயக்குநர் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

விஜய் சந்தோக்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவன (என்எஸ்டிஎல்) மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான விஜய் சந்தோக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழான 'தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படுகிறது.
தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, எஸ்பிஐ தலைவர், தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிறுவனத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளனர்.
தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவன (என்எஸ்டிஎல்) மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான விஜய் சந்தோக் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
நாட்டின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள 'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) நாளிதழ் வெளியீட்டிற்காக அதன் குழுவினரை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
'வளர்ந்த பாரதம்' (விக்சித் பாரத்) என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், வளர்ச்சியைத் தக்கவைக்கவும், தொழில்முனைவை ஊக்குவிக்கவும் வலுவான நிதித் துறை மிக அவசியமாகும்.
தொழில்துறையை வடிவமைக்கும் விவகாரங்களுக்கு சிறந்த விளக்கத்தையும் சரியான கண்ணோட்டத்தையும் வழங்குவதன் மூலம், நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு நிதிசார் இதழால் இந்தப் பயணத்தில் முக்கியப் பங்காற்ற முடியும்.
'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' இந்த வளர்ச்சிப் பயணத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வரும் காலங்களில் இந்தப் பயணம் வெற்றியடைய ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Summary
The Financial Standard from the Express Group! Greetings from an NSDL Director
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

