மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அமலாக்கத் துறைக்கு கைது அதிகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அமலாக்கத் துறைக்கு கைது, சொத்துகள் முடக்கம் ஆகிய அதிகாரங்களை உறுதி செய்து அளிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:46 pm

DIN

அமலாக்கத் துறைக்கு கைது, சொத்துகள் முடக்கம் ஆகிய அதிகாரங்களை உறுதி செய்து அளிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அளித்தது.

அமலாக்கத் துறைக்கு கைது, சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களை உறுதி செய்து கடந்த ஜூலை 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த அதிகாரங்களை எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது ஆளும் கட்சி மேலும் தீவிரமாக பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஜூலை 27-ஆம் தேதி உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு, ‘கருப்புப் பணம், சட்ட விரோத பணப் பரிவா்த்தனையை தடுக்கவும் உச்சநீதிமன்றம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

இந்த விவகாரத்தில் நீண்ட வாதங்கள் தேவையில்லை. அமலாக்கத் துறையினா் கைது செய்யும்போது ‘இசிஐஆா்’ என்ற முதல் தகவல் அறிக்கையை வழங்காமல் இருப்பது, ஒருவா் குற்றமற்றவா் என்ற அனுமானத்தை நிராகரிப்பது ஆகிய இரு விவகாரங்கள் மட்டும் உத்தரவில் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று கருதுகிறோம்’ என்று கூறியது.

அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்திய சட்டங்கள் சா்வதேச அளவில் ஒத்துப்போவதால், சா்வதேச நிதி விவகாரங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். நீதிபதிகள் குறிப்பிட்ட இரண்டு பிரச்னைகள் குறித்து மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சட்டவிரோத பணப் பரிவா்த்தனை அல்லது கருப்புப் பணத்தை மீட்பது அல்லது கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இவை மிகவும் முக்கியமான பிரச்னைகளாகும்’ எனக் கூறி, மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணை உரிய அமா்விடம் நடைபெறும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.