பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செத்தாலும் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: கேஜரிவால்

செத்தாலும் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 8:21 am

DIN

செத்தாலும் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற  எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜகவினர் பேரம் பேசிவருவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 53 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ளவர்கள் கேஜரிவாலிடம் செல்போனில் தொடர்புகொண்டு ஆதரவளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களுடன் காந்தி நினைவிடத்திற்கு சென்ற கேஜரிவால் அஞ்சலி செலுத்தினார்.

Story image

அப்போது செய்தியாளர்களிடம் கேஜரிவால் பேசியதாவது:

“மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்தோம். சில நாள்களுக்கு முன்பு மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு பதியப்பட்டு 12 மணிநேரம் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கணக்கில் வராத பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை.

ஆம் ஆத்மி மற்றும் கேஜரிவாலிடம் இருந்து விலக வேண்டுமென்று சிசோடியாவுக்கு பாஜகவிலிருந்து செய்தி அனுப்பப்பட்டது. பிற எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைந்தால், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதுடன், முதல்வர் பதவி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மணீஷ் சிசோடியா போன்ற ஒருவர் என்னுடன் இருப்பதற்கு, நான் கடந்த காலங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பாஜகவின் அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.க்களிடம் பாஜகவினர் பேரம் பேசி வருகின்றனர். பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக கூறியுள்ளனர்.

ஒருவர்கூட இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். நேர்மையான கட்சிக்கு வாக்களித்துள்ளீர்கள் என்பதை தில்லி மக்களுக்கு கூற விரும்புகிறேன். செத்தாலும், நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.