கேஜரிவால் கூட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை: காரணம் என்ன?

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 9 பேர் பங்கேற்கவில்லை.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்


புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 9 பேர் பங்கேற்கவில்லை.

புது தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற  எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜகவினர் பேரம் பேசிவருவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 62 எம்எல்ஏக்களில் 53 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், “பாஜகவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ தில்லியில் தோல்வி அடைந்துவிட்டது. 62 எம்.எல்.ஏ.க்களில் 53 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டப்பேரவைத் தலைவர் வெளிநாட்டில் இருப்பதாலும், மணீஷ் சிசோடியா ஹிமாச்சலில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 7 பேரிடம் முதல்வர் செல்போனில் பேசினார். அவர்கள் அனைவரும் கடைசி மூச்சு வரை முதல்வருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எங்கள் கட்சியின் 12 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் அழைத்து கட்சியை உடைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 40 எம்.எல்.ஏ.க்களை கட்சியிலிருந்து பிரித்து அவர்களுக்கு தலா ரூ. 20 கோடி தருவதற்கு பேரம் பேசியுள்ளனர்.”

முன்னதாக, தங்கள் எம்எல்ஏக்கள் நான்கு பேரை ஈர்க்க பாஜக முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குத் தலா ரூ. 20 கோடி வழங்க அக்கட்சி முன்வந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com