சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

உ.பி: மொராதாபாத்தில் திருமண மண்டபத்தில் தீ: 5 பேர் பலி, 7 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் இறந்தனர். 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 4:20 am


உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் இறந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரின் மையத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டட  திருமண மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றியதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மண்டபத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், தி விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 

திருமண மண்டபத்தில் ஏற்பட தீ விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய 7 பேரை மீட்டனர். 

தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.