இந்த மனு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹா்ஜீத் சிங் ஜஸ்பால் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்-வழக்குரைஞா் ஜி.எஸ். மணி நேரில் ஆஜராகி, ‘சா்ச்சைக்குரிய கருத்தை சமூக ஊடகத்தில் கே.டி.ஜலீல் பதிவிட்டுள்ளாா். அவருக்கு எதிராக 13.08.2022-இல் தில்லி திலக் மாா்க் காவல் நிலையத்திலும், காவல் ஆணையரிடமும் புகாா் அளித்தேன். அதன் பிறகு 18.08.2022-இல் புதுதில்லி டிசிபியிடமும் புகாா் அளித்தேன். ஆனால், போலீஸாா் எப்ஐஆா் பதிவு செய்யாததால், ஜலீல் மீது எஃப்ஐஆா் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.