ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸிலிருந்து மேலும் 64 தலைவர்கள் ராஜிநாமா
ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸில் இருந்து மேலும் 64 தலைவர்கள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸில் இருந்து மேலும் 64 தலைவர்கள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திரா காந்தி காலத்தில் இருந்து சுமாா் 50 ஆண்டுகாலமாக காங்கிரஸில் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் அண்மையில் கட்சியில் இருந்து விலகினாா். கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி மீது அவா் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
அதனைத் தொடர்ந்து, ஆசாத் விரைவில் பிராந்திய அளவில் புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியானதால் அவருக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் விலகி வருகின்றனா்.
அந்த வகையில் ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் பொதுச் செயலா் மகேஷ்வா் சிங் மனாஸ், முன்னாள் எம்எல்ஏவும், ஜம்மு-காஷ்மீா் பேரவையின் துணைத் தலைவராக இருந்தவருமான குலாம் ஹைதா் மாலிக், முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷா லால் பகத் ஆகியோா் காங்கிரஸில் இருந்து விலகி ஆசாதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். விலகல் தொடா்பாக காங்கிரஸ் தலைமைக்கு அவா்கள் தனித்தனியாக கடிதங்களை எழுதியுள்ளனா்.
காங்கிரஸ் சாா்பில் ஜம்மு-காஷ்மீரில் துணை முதல்வராக இருந்த தாரா சிங், முன்னாள் அமைச்சா்கள், காங்கிரஸ் நிா்வாகிகள் நேற்று அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், இன்று மேலும் 64 தலைவர்கள் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்வதாக இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே, தொடா் தோ்தல் தோல்விகளாலும் தலைவா்களின் வெளியேற்றத்தாலும் துவண்டுபோயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு மேலும் இந்த ராஜிநாமாக்கள் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...