/

என்ன சொல்கிறது தற்போதைய கரோனா நிலவரம்?

நாட்டில் இன்று காலை புதிதாக 5,439 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 65,732 ஆகக் குறைந்துள்ளது.

News image
என்ன சொல்கிறது தற்போதைய கரோனா நிலவரம்?
Updated On :30 ஆகஸ்ட் 2022, 5:37 am

DIN


புது தில்லி: நாட்டில் இன்று காலை புதிதாக 5,439 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 65,732 ஆகக் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.44 கோடியாக இருக்கும் நிலையில், கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.38 கோடியாக உள்ளது. மொத்த பாதிப்பில், பலி விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கரோனா நோயாளிகளின் விகிதம் 0.15 சதவீதமாக இருப்பதாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.66 சதவீதமாக இருந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 1.70 சதவீதமாகவும், வாரந்தோறும் தொற்று உறுதியாகும் விகிதம் 2.64 சதவீதமாகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.