குஜராத் மாநிலத்தில் மினி ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் ஜாம்பூர் கிராம மக்கள் முதல்முறையாக வாக்களித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த பழங்குடியினர் ஜூனாகத் மாவட்டம் ஜாம்பூர் கிராமத்தில் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்முறையாக இவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு வாக்காளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜாம்பூர் கிராமத்திலேயே பிரத்யேகமான பழங்குடியினர் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் நடைபெற்று வருகின்றது.
முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஜாம்பூர் கிராம மக்கள் பலவகை உணவுகளை சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு 19 மாவட்டங்களில் 89 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | குஜராத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்! துணை நிற்கிறோம்!! - கமல்

அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - பாகிஸ்தான்

கர படத்தின் கதாபாத்திரங்கள்!

நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

