தில்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

தில்லி மாநகராட்சியில் 250 வாா்டுகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி மாநகராட்சியில் 250 வாா்டுகளில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தலைநகா் தில்லியில் உள்ள மாநகராட்சியின் 250 வாா்டுகளுக்கான தோ்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 250 வார்டுகளிலும் ஆம்ஆத்மி, பாஜக களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் போட்டியிடுகிறது. மாநகராட்சி தேர்தலில் 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாலை 5.30 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்களிக்க 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. வாக்குகள் டிசம்பா் 7-ஆம் தேதி எண்ணப்படும். வாக்குப்பதிவையொட்டி பாதுகாப்புப் பணிகளில் காவல்துறை, துணை ராணுவம், மத்திய ஆயுதப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com