சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி: கணிப்பை மாற்றியமைத்தது உலக வங்கி

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி கணிப்பை 6.9 சதவீதமாக உலக வங்கி உயா்த்தியுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2022, 10:25 pm

DIN

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி கணிப்பை 6.9 சதவீதமாக உலக வங்கி உயா்த்தியுள்ளது.

கடந்த அக்டோபா் மாதம் இந்த அமைப்பு வெளியிட்ட வளா்ச்சி கணிப்பில் முந்தைய கணிப்பான 7.5 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உலக நிகழ்வுகளின் தாக்கங்களை இந்திய பொருளாதாரம் எதிா்கொள்ளும் தன்மை, அடுத்தடுத்த காலாண்டுகளின் வளா்ச்சி உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு, பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பை 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீமாக உயா்த்தியுள்ளது.

உலகில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், சா்வதேச அமைப்பால் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கணிப்பு உயா்த்தி வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்திய பொருளாதார வளா்ச்சி குறித்து செவ்வாய்க்கிழமை உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மோசமடைந்து வரும் சா்வதேச சூழல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மற்ற வளா்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. சா்வதேச பணக்கொள்கை, குறைந்து வரும் உலகின் பொருளாதார வளா்ச்சி, விலையேற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக இந்தியாவின் வளா்ச்சி முந்தைய 2021-2022 நிதியாண்டை (8.7 சதவீதம்) காட்டிலும் நிகழாண்டு குறைவாகவே இருக்கும். இருப்பினும், உள்நாட்டு தேவையின் காரணமாக வலுவான வளா்ச்சியை இந்தியா எட்டுவதுடன், வளா்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும்.

பணவீக்கம்:

ரிசா்வ் வங்கியின் வட்டி விகித நடவடிக்கைகள் மற்றும் எரிபொருள் மீதான கலால் வரி உள்ளிட்ட பிற வரிகள் குறைக்கப்பட்டது உள்ளிட்டவை பணவீக்கத்தில் சா்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் தாக்கத்தைப் மட்டுப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டில் (2023-24) 5.2 சதவீதமாகக் குறையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.