தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகனைக் காப்பாற்ற தாயின் போராட்டம்; 'கொலையான' பெண்ணை உயிரோடு கண்டுபிடித்த ஆச்சரியம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மகனைக் காப்பாற்றுவதற்காக தாய் மேற்கொண்ட போராட்டம் வெற்றியில் முடிந்தது.

News image
மகனைக் காப்பாற்ற தாயின் போராட்டம்; 'கொலையான' பெண்ணை உயிரோடு கண்டுபிடித்த ஆச்சரியம்
Updated On :7 டிசம்பர் 2022, 11:16 am

DIN


முஸாஃபர்நகர் : கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மகனைக் காப்பாற்றுவதற்காக தாய் மேற்கொண்ட போராட்டம் வெற்றியில் முடிந்தது.

கொலையானதாகக் கூறப்பட்ட பெண்ணை பிருந்தாவன் ஆசிரமத்தில் உயிரோடு கண்டுபிடித்த காவல்நிலையத்தில ஒப்படைத்திருக்கிறார் அந்த தாய்.

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி, கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து கோண்டா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு, அதனை தனது மகள்தான் என தந்தை அடையாளம் காட்டப்பட்டது. இதையடுத்து, பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த 18 வயதே ஆன 12ஆம் வகுப்பு மாணவர் மீது பெண்ணைக் கடத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், தனது மகன் குற்றமற்றவர் என்பதை உறுதியாக சம்பிய அவரது தாய், அப்பெண்ணைத் தன்னத்தனியாக தேடி அலைந்தார். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு எங்கெங்கோ சென்று எல்லோரிடமும் காட்டி பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.

பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அங்கு குற்றம்சாட்டப்பட்ட நபரின் தாயும் சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் சாமியாருடன் வந்திருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்ததும், அடையாளம் தெரிந்துவிட்டது. அவர்தான் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் என்று.

உடனடியாக காவல்நிலையத்தில் அப்பெண் குறித்து தகவல் அளித்துள்ளார். திங்கள்கிழமை அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்தான் இவரா என்பதை உறுதி செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

இதற்கிடையே, இந்தப் பெண்தான் தங்களது மகள் என்பதை அவரது பெற்றோர் அடையாளம் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சாமியுருடன் ஆசிரமத்தில் சேர அப்பெண் குடும்பத்தை விட்டு ஓடியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.