தில்லி தேர்தல் முடிவுகள்: ஆதிக்கம் செலுத்த தொடங்கியது ஆம் ஆத்மி

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தில்லி ஆம் ஆத்மி அலுவலகம்
தில்லி ஆம் ஆத்மி அலுவலகம்
Updated on
1 min read

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. தற்போது ஆம் ஆத்மி ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.

பகல் 12 மணி நிலவரப்படி:

வெற்றி

ஆம் ஆத்மி 89
பாஜக 69
காங்கிரஸ் 4
சுயேட்சை 1

முன்னிலை

ஆம் ஆத்மி 47
பாஜக 32
காங்கிரஸ் 5
சுயேட்சை 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com