தாயின் இறுதிச் சடங்கை செய்ய ஹிந்து, முஸ்லிம் மகன்கள் மோதல்

தாயின் இறுதிச் சடங்கை தங்களது முறைப்படித்தான் செய்ய வேண்டும் என்று அவரது இரண்டு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டனர். ஒருவர் தன் முறைப்படி எரிக்க வேண்டும் என்றும், மற்றொரு மகன் தங்கள் முறைப்படி புதைக்க வே
கோப்புப் படம்.
கோப்புப் படம்.


பாட்னா: தாயின் இறுதிச் சடங்கை தங்களது முறைப்படித்தான் செய்ய வேண்டும் என்று அவரது இரண்டு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டனர். ஒருவர் தன் முறைப்படி எரிக்க வேண்டும் என்றும், மற்றொரு மகன் தங்கள் முறைப்படி புதைக்க வேண்டும் என்றும் மோதிக் கொண்டனர்.

நல்லவேளையாக, இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தரையிட்டு, அவர்களது உத்தரவுப்படி, உயிரிழந்த பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண் ரெய்கா கத்தூன், முதலில் முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், 45 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.   பிறகு ரெய்கா ராஜேந்திர ஜா என்ற இந்துவைத் திருமணம் செய்து கொண்டு ஜாங்கிடி கிராமத்தில் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார்.

இவர்களுடன்தான், முதல் கணவருக்குப் பிறந்த மொஹம்மது மொஹஃபிலும் வாழ்ந்து வந்தார். இரண்டாவது மகன் பப்லு ஜா தனது தந்தையுடன் கோயிலுக்குச் சென்று வந்த நிலையில், முதல் மகன் முஸ்லிம் மதத்தையே பின்பற்றி வந்தார்.

வீட்டில் ஒருவர் தொழுகை செய்யும் போது, மற்றொரு மகன் சுவாமி படங்களுக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். பிறகு ரெய்காவும் இந்து மதத்துக்கு மாறி தனது பெயரையும் ரேகா தேவி என்றே மாற்றிக் கொண்டார்.

இவர்கள் உயிரோடு இருந்த வரை வீட்டுக்குள் எந்த மதப் பிரச்னையும் வரவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரேகா தேவியின் கணவர் மரணமடைந்த பிறகும் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

உடல்நலக் குறைவால் ரேகா மரணமடைந்த போது, தங்களது முறைப்படித்தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என இரண்டு மகன்களும் மோதிக் கொள்ள, காவல்துறை தலையிட்டு சுமூகத் தீர்வுக்குக் கொண்டு வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com