நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சினிமா பாணியில்.. நிச்சயதார்த்த நாளில் மணப்பெண் கடத்தல்

பல் அறுவைசிகிச்சை மருத்துவம் பயின்று வரும் 24 வயது பெண், அவரது நிச்சயதார்த்த நாளில், 50க்கும் மேற்பட்ட குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

News image

சினிமா பாணியில்.. நிச்சயதார்த்த நாளில் மணப்பெண் கடத்தல்

Updated On :10 டிசம்பர் 2022, 10:32 am

DIN

ஹைதராபாத்: பல் அறுவைசிகிச்சை மருத்துவம் பயின்று வரும் 24 வயது பெண், அவரது நிச்சயதார்த்த நாளில், 50க்கும் மேற்பட்ட குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கிழமையன்று மணப்பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த குண்டர்கள், வீட்டிலிருந்த பொருள்களை சூறையாடியதோடு, பெண்ணை கடத்திச் செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள்.

வைஷாலி என்ற அந்தப் பெண்ணை வீட்டுக்குள் இருந்து இழுத்துச் சென்று காரில் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர். சுமார் 30 நிமிடங்களில் வீட்டை சூறையாடி, 5 பேரை படுகாயமடையச் செய்து, வீட்டிலிருந்து சிசிடிவி காமராக்களையும் அடித்து உடைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையத் தொடங்கி, பெண்ணைத் தேடும் பணியை துரிதப்படுத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற தேர்தல் வேட்டையில், குண்டர்களிடம் சிக்கியிருந்த பெண் மீட்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலன் நவீன் ரெட்டி தலைமறைவாக இருக்கிறார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.