ஹிமாசல் முதல்வா் யார்? பிரியங்கா காந்தி அறிவிப்பார்
புதிய முதல்வர் யார் என்பது குறித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிமாசலில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்ய முக்கிய தலைவருக்கு அதிகாரம் அளித்து, கட்சியின் 40எம்எல்ஏக்களும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முடிவு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
ஹிமாசலில், பிரியங்கா காந்தி தலைமையில்தான் தேர்தல் பணிகள் நடைபெற்றன. பிரியங்கா காந்தியுடன் இணைந்து பல காங்கிரஸ் தலைவர்கள் ஏராளமான பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி, கட்சியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஒரு தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து, பிரியங்கா சந்திக்கும்முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் கட்சியைத் தலைமை தாங்கி பிரசாரம் மேற்கொண்டார் பிரியங்கா. எனினும், அந்தமாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராவது யார் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, ஹிமாசலுக்கு வந்துள்ள காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா்கள், மாநில ஆளுநா் ராஜேந்திர ஆா்லேகரை வெள்ளிக்கிழமை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோர அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
68 உறுப்பினா்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்தன. கடந்த 1985-ஆம் ஆண்டில் இருந்து ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ளது.
இப்போதைய தோ்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், முதல்வா் பதவிக்கு காங்கிரஸில் போட்டி ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் மனைவியும் கட்சியின் மாநிலத் தலைவருமான பிரதிபா சிங், இப்போட்டியில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தொடா்ந்து, கட்சியின் மூத்த தலைவா் சுக்வீந்தா் சிங் சுக்கு, பேரவை குழு தலைவா் முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளிட்டோரும் முதல்வா் நாற்காலிக்கான போட்டியில் உள்ளனா்.
கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களான சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், மூத்த தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா, ஹிமாசல பிரதேசத்துக்கான கட்சியின் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா ஆகியோா் சிம்லாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
பின்னர், பூபேஷ் பகேல், பூபிந்தா் சிங் ஹூடா, ராஜீவ் சுக்லா, ஹரியாணா மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் கரண் சிங் தலால் உள்ளிட்டோா், ஆளுநா் ஆா்லேகரை சந்தித்து, கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் பட்டியலை வழங்கினா்.
இச்சந்திப்புக்கு பின், கரண் சிங் தலால் கூறுகையில், ‘ஹிமாசல பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோர கால அவகாசம் அளிக்குமாறு ஆளுநரிடம் கோரினோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...