ஆந்திரத்தில் பசுவை தொட்டு வணங்கச் சென்ற பாஜக எம்பியை அப்பசு எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மிர்ச்சி ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக திறப்பு விழாவுக்காக குண்டூர் மிர்ச்சி யார்டுக்கு எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் நேற்று சென்றிருக்கிறார். அப்போது வீடு திறப்பு விழாவுக்காக கொண்டு வரப்பட்ட பசுவை தொட்டு வணங்க அதன் பக்கத்தில் அவர் சென்றுள்ளார்.
பசுவை நரசிம்மராவ் தொட்டவுடன் அந்த பசு அவரை எட்டி உதைத்தது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய எம்பி, மீண்டும் அப்பசுவை தொட்டு வணங்க முயன்றார். ஆனால் அப்போதும் அப்பசு எகிறியது. உடனே சுதாகரித்துக் கொண்ட நரசிம்மராவ், அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்த விடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வணங்கச் சென்ற பாஜக எம்பியை பசு எட்டி உதைத்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


