தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சரத் பவாரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

News image
சரத் பவாரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது!
Updated On :13 டிசம்பர் 2022, 10:06 am

DIN

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

பாட்னாவில் உள்ள சோனி கடந்த மூன்று நான்கு மாதங்களாக பவாரின் பங்களா வீட்டை தொடர்புகொண்டு தொலைபேசியில் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். 

மேலும், பணியிலிருந்த காவலர்களை மும்பைக்கு வந்து துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்றும் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

செல்போன் எண்ணை அடையாளம் கண்டுபிடித்து போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளைச் செய்துள்ளார். 

மும்பை போலீஸ் குழுவால் என்.சோனி(45) பாட்னாவில் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.