ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தகவல் தெரிவித்துள்ளாா்.
விளம்பரங்களுக்காக மத்திய அரசின் செலவினங்களைப் பற்றி மக்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. எம். செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூா்வமாக அமைச்சா் தாக்குா் அளித்த பதிலில், ‘மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ. 91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2014-2015-ஆம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ.424.84 கோடி செலவிடப்பட்டது. அடுத்தடுத்து, 2015-2016ஆம் நிதியாண்டில் ரூ.508.22 கோடியும், 2016-2017-ஆம் நிதியாண்டில் ரூ.468.53 கோடியும், 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.636.09 கோடியும், 2018-2019-ஆம் நிதியாண்டில் ரூ.429.55 கோடியும், 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.295.05 கோடியும், 2020-2021-ஆம் நிதியாண்டில் ரூ.179.04 கோடியும் செலவிடப்பட்டுள்ளன. கடந்த 2014-2015-ஆம் நிதியாண்டில் மின்னணு ஊடங்களில் ரூ.473.67 கோடி செலவிடப்பட்டது . அடுத்தடுத்து, 2015-2016ஆம் நிதியாண்டில் ரூ.531.60 கோடியும், 2016-2017-ஆம் நிதியாண்டில் ரூ. 609.15 கோடியும், 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.468.92 கோடியும், 2018-2019-ஆம் நிதியாண்டில் ரூ.514.28 கோடியும், 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.317.11 கோடியும், 2020-2021-ஆம் நிதியாண்டில் ரூ.101.24 கோடியும் செலவிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மளிகைக் கடையில் வேன் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

விபத்தில் இறந்த ஐடி பெண் ஊழியா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளித்த காப்பீடு நிறுவனம்

சேலத்தில் மதுபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை கைது

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

