மேற்கு வங்கத்தில் 70 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: ஒருவர் பலி!
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் 70 பேருடன் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.


மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் 70 பேருடன் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
நெடுஞ்சாலை-26இல் உள்ள இலாஹிபூர் பகுதியில் இன்று காலை 4.30 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 50 வயதான பெண் (தபசி ஹல்டர்) உயிரிழந்தார். பெரும்பாலான பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் அருகிலுள்ள கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
காயமடைந்தவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் பேருந்து திங்கள்கிழமை புருலியா மாவட்டத்தில் உள்ள ரெய்திகியில் இருந்து அயோத்தி மலைகளுக்குச் சுற்றுலா சென்றதாகவும், திரும்பி வந்துகொண்டிருந்த போது விபத்து நேர்ந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...