நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் படிக்கட்டில் இடறி விழுந்து காயமடைந்துள்ளார். இதில் அவரின் இடது கால் சதை பிசகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் நாடாளுமன்றத்தில் இருக்கையில் இருந்து வெளியேறி அமளியில் ஈடுபட்டபோது, படிக்கட்டில் இடறி விழுந்துள்ளார்.
இதனால் காயமடைந்த அவர், கடும் வலியின் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் கட்டுடன் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை சுட்டுரையில் அவர் பகிர்ந்துள்ளார்.

படங்களுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது, சற்று சிரமமாக உணர்கிறேன். நாடாளுமன்ற படியில் இடறி விழுந்தபோது எனது காலில் சுளுக்கு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இருந்ததால், அதனை பொருட்படுத்தாமல் இருந்தேன். ஆனால், வலி நேரமாக நேரமாக அதிகமாக இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது என்னால் நகர முடியவில்லை. இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் எனது வார இறுதி திட்டங்களை ரத்து செய்துவிட்டேன் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


