நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெலங்கானாவில் சோகம்: வீடு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த 6 பேரும் பலி!

தெலங்கானாவில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

News image
Updated On :17 டிசம்பர் 2022, 9:06 am

DIN

ஹைதராபாத்: தெலங்கானாவில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

தெலங்கானா மாநிலம், மன்சேரியல் மாவட்டத்தில் ராமகிருஷ்ணாபூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கடாபூர் கிராமத்தில் சிவய்யா என்பவரின் வீடு நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் சிவய்யா (50), அவரது மனைவி பத்மா (45), பத்மாவின் மூத்த சகோதரியின் மகள் மோனிகா (23) மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என 6 பேர் பலியாகினர். 

தீ விபத்துக்‍கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்‍குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.