தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ராகுல் காந்தி ராணுவத்தை மட்டுமல்ல நாட்டையும் இழிவுபடுத்துகிறார்: கிரண் ரிஜிஜு

ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்துகிறார் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

News image

கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)

Updated On :17 டிசம்பர் 2022, 12:28 pm

புது தில்லி: ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் இழிவுபடுத்துகிறார் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது; ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரண் ரிஜிஜு பேசியுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களை நிறைவு செய்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி பேசுகையில்,  இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது. இந்திய பிராந்தியத்தின் 2,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டது. 20 வீரா்களைக் கொன்றுள்ளது. அண்மையில் அருணாசல பிரதேச எல்லையில் சீனப் படையினரால் நமது வீரா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.

எல்லையில் சீனா மேற்கொள்வது ஆக்கிரமிப்பு முயற்சில்ல. அது போருக்கான் முன்னேற்பாடு. அவா்கள் அங்கு குவிக்கும் ஆயுதங்களைப் பாா்த்தால், அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஜிஜு டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய ராணுவத்தை மட்டும் ராகுல் காந்தி அவமதிக்கவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதித்துள்ளார்.  அதே வேளையில், இந்திய ராணுவத்தை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.