மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஜாா்க்கண்ட்: மனைவியை பல துண்டுகளாக வெட்டி கொலை செய்த கணவன் கைது

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மனைவியைப் பல துண்டுகளாக வெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்த கணவனை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா்.

Updated On :18 டிசம்பர் 2022, 8:43 pm

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மனைவியைப் பல துண்டுகளாக வெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்த கணவனை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா்.

சாஹிப்கஞ்ஜ் மாவட்டத்தில் உள்ள போரியா பகுதியில் மனித உடல் பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட உள்ளூா் மக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

விசாரணையில் அம்மாவட்டத்தின் டோண்டா பாஹா் பகுதியைச் சோ்ந்த தில்தாா் அன்சாரி என்பவா் அவருடைய இரண்டாவது மனைவியை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ இது வரை 18 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில உடல் பாகங்கள் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத வீடுகளில் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அன்சாரி கைதுசெய்யப்பட்டாா். இந்தக் குற்றத்தில் இவருக்கு உதவிய குடும்ப உறுப்பினா்களும் கைது செய்யப்படுவா்’ எனத் தெரிவித்தனா்.

தில்லியில் ஷ்ரத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டதைப் போன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.