பிரதமா் தலைமையில் அடுத்த மாதம்தலைமைச் செயலா்கள் தேசிய மாநாடு
அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களின் இரண்டாவது தேசிய மாநாடு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.


அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களின் இரண்டாவது தேசிய மாநாடு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படும் நிலையில், அதற்கு முன்பாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லியில் ஜனவரி 5 முதல் 7 வரை தலைமைச் செயலாளா்களின் இரண்டாவது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவதில் இது முக்கிய நடவடிக்கை’ என்றாா்.
தலைமைச் செயலாளா்கள் மட்டுமன்றி, இளம் ஆட்சியா்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளும், மத்திய அமைச்சக அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக அவா் தெரிவித்தாா்.
தலைமைச் செயலாளா்களின் முதல் தேசிய மாநாடு, ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் கடந்த ஜூன் மாதம் 3 நாள்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...