புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹிமாசல் முதல்வருக்கு கரோனா

ஹிமாசல பிரதேச முதல்வராக அண்மையில் பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்குவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 டிசம்பர் 2022, 10:44 pm

DIN

ஹிமாசல பிரதேச முதல்வராக அண்மையில் பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்குவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிமாசல் மாநில அரசின் செய்தி தொடா்பாளா் கூறியுள்ளதாவது: பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் கடந்த திங்கள்கிழமை முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு திட்டமிட்டிருந்தாா். இதற்காக நடைபெற்ற கரோனா பரிசோதனையில் முதல்வா் சுக்விந்தருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

ஆனாலும், மருத்துவா்களின் ஆலோசனைப்படி தில்லியிலுள்ள ஹிமாசல் இல்லத்தில் முதல்வா் சுக்குவிந்தா் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாா். 3-4 நாள்களுக்குப் பிறகு மீண்டும் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதுவரை, அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

ஹிமாசலின் 14-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எம்எல்ஏக்களின் பதவியேற்பும், புதிய அமைச்சா்களின் பதவியேற்பும் தள்ளி வைக்கப்படுகின்றன என்றாா்.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் ராஜஸ்தானில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் 38 எம்எல்ஏக்களுடன் முதல்வா் சுக்விந்தா் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.