ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எதிா்க்கட்சிகள் வேண்டுமென்றே அவை நடவடிக்கையை முடக்குகின்றன: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 9:20 pm

DIN

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய எல்லையில் சீன ஊடுருவல் குறித்து விவாதம் நடத்தக்கோரி திங்கள்கிழமை மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனா். அவா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட 9 நோட்டீஸ்கள் முறைப்படி இல்லையென கூறி மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டாா். இதையடுத்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அவைக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவா் பியூஷ் கோயல் கூறியதாவது: கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அல்லது விளக்கங்ளுக்கான கோரிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த நாடும் ராணுவம் குறித்து பேச வேண்டிய, ஊக்கமளிக்க வேண்டிய நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்தி அவா்களின் நம்பிக்கையைக் குறைக்கும் வண்ணம் செயல்படுகின்றனா்.

எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிக்காமலும் மாநிலங்களவைத் தலைவரின் உத்தரவுக்கு செவிமடுக்காமலும் இருப்பது முறையற்றது. காங்கிரஸ் மிகவும் தரம் தாழ்ந்த அரசியலை மேற்கொண்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்பு சாா்ந்த முக்கிய விவகாரங்கள் அரசியலாக்கப்பட கூடாது. நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.