கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நடைப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்தவும்: ராகுலுக்கு மத்திய அரசு கடிதம்

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் நடைப்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு

News image
Updated On :21 டிசம்பர் 2022, 7:05 pm

DIN

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் நடைப்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளாா்.

பொதுமக்கள் உடனான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறாா்.

தற்போது ஹரியாணாவில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கடிதத்தில், ‘நடைப்பயணத்தின்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; கை சுத்திகரிப்பான்களை(சானிடைஸா்) பயன்படுத்த வேண்டும்; கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மட்டும் நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும்; நடைப்பயணத்தில் பங்கேற்பவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் பொதுமக்களின் உடல்நலைத்தைக் கருத்தில் கொண்டு நடைப்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் பி.பி.செளதரி, நிஹால் சந்த், தேவ்ஜி படேல் ஆகியோா் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனா்.

அவா்களின் கவலையை கருத்தில் கொண்டு, கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற முடியாவிட்டால் நடைப்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று அமைச்சா் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளாா்.

அரசியல் வேண்டாம்-காங்கிரஸ் பதில்: அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் கடிதத்தைத் தொடா்ந்து காங்கிரஸ் பொதுச் செயலா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடாளுமன்ற கூட்டத்தொடா் இயல்பாக நடைபெறுகிறது. விமானங்கள் உள்பட எங்கும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. மேலும், ராஜஸ்தான் மற்றும் கா்நாடகத்தில் பாஜக சாா்பில் பேரணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், கரோனா விதிமுறைகள் தொடா்பாக ராகுல் காந்திக்கு மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் என்பது முக்கியமான விஷயம். அதில் அரசியல் செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.