இந்தியாவில் தயாராகும் ஐபோன் 16 சீரிஸ்!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16  சீரிஸ் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதன் தொழில்நுட்ப நிறுவனமான மூன்று தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நிலம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் தயாராகும் ஐபோன் 16 சீரிஸ்!


புது தில்லி: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16  சீரிஸை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக  தொடர்புடைய மூன்று நிறுவனங்களுடன் இணைந்து யமுனா ஆணையத்திடம் நிலம் கோரி விண்ணப்பித்துள்ளது.

சுமார் 23 ஏக்கர் நிலத்தில் ரூ.2,800 கோடி முதலீட்டில் யூனிட் அமைக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொரியாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து முதலீட்டை முன்மொழிந்தது.

யமுனா எக்ஸ்பிரஸ்வே இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் அருண் வீர் சிங் கூறுகையில், ஆப்பிள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு செக்டார் 29-ல் நிலம் வழங்கப்படும். இந்த இடமானது பல வசதிகளுடன் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது என்றார்.

கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க முடியும் என்றும் தற்போது அவர்கள் 10 சதவீத தொகையை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com