உத்தர பிரதேசம்: வீடு எரிந்து 5 போ் பலி
உத்தர பிரதேசம் மாநிலம், மௌ மாவட்டத்தில் வீடு எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.


உத்தர பிரதேசம் மாநிலம், மௌ மாவட்டத்தில் வீடு எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அருண்குமாா் கூறுகையில், ‘ஷாபூா் கிராமத்தில் வசித்து வந்தவா் ராஜ்பா். இவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு சமையலறையில் இருந்த அடுப்பிலிருந்து தீப்பொறி பரவி வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்பா் (34) , அவரின் மூன்று மகன்களான அபிஷேக் (12), தினேஷ் (10), அஞ்ஜேஷ் (6) மற்றும் அவரின் உறவுக்கார சிறுமி சாந்தனி (14) ஆகிய 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இறந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இறந்தவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 4 லட்சம் என்ற அடிப்படையில் அந்தக் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...