

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 243 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,609 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு மகாராஷ்டிரத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,30,699 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,13,080 பேருக்கு கரோனா செலுத்தியுள்ள நிலையில், இதுவரை 220.09 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.