புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு மாபெரும் முதலீடு: பிரதமர் மோடி

ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு மாபெரும் முதலீட்டினை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
Updated On :30 டிசம்பர் 2022, 10:48 am

DIN

ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு மாபெரும் முதலீட்டினை மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் ஹௌராவிலிருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியவை என தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்திலிருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை டிசம்பர் 30-ஆம் தேதியில் தொடங்கப்படுவதில் முக்கியத்துவம் உள்ளது. இதே நாளில் 1943-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். 21-ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ரயில்வே துறையின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பணிகள் மிகவும் முக்கியம். ரயில்வே துறையை மேம்படுத்த நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களின் தடையற்ற மற்றும் வேகமான பயணத்துக்காக நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், நீர் வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.