2024 தேர்தலில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா?
பாதுகாப்பு மீறல்களுக்கு மத்தியில், குண்டு துளைக்காத காரில் அமர்ந்து பாரத் ஜோடோ (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) யாத்திரை சாத்தியமில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.


2024 தேர்தலில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? என செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒற்றுமையாக இருக்க வேண்டும், அன்பு நிறைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என ராகுல்காந்தி கூறினார்.
பாதுகாப்பு மீறல்களுக்கு மத்தியில், குண்டு துளைக்காத காரில் அமர்ந்து பாரத் ஜோடோ (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) யாத்திரை சாத்தியமில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த நடைப்பயணம் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து அதன் 108 ஆவது நாளில் தில்லிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி தில்லிக்குள் நுழைந்த நடைப்பயணம் அன்று மாலை செங்கோட்டையில் நிறைவடைந்து. 9 நாள்கள் ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் தில்லியில் இருந்து நடைப்பயணம் தொடங்குகிறது.
இந்நிலையில், காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவின் தில்லியில் நடந்த போது ராகுல் காந்திக்கு தில்லி போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டு மத்தியில், ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
அப்போது, "பாஜக அரசு காரணம் எதுவும் இல்லாமல், யாத்திரையின்போது நான் சொந்த பாதுகாப்பை மீறியதாகக் கூறி பாதுகாப்பு படையினரை வைத்து வழக்குப் பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்," என்று குற்றம் சாட்டினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைத் தலைவரே தானே விதிமுறைகளை மீறியதாகக் கூறியதாக ராகுல் கூறினார்.
உள்துறை அமைச்சகம் "நான் குண்டு துளைக்காத காரில் பாரத் ஜோடோ யாத்திரையை செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. நான் பாத யாத்திரை செல்லும்போது, அதை நான் எப்படி செல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பிய ராகுல், யாத்திரைக்கு எதிராக பாஜக பல பிரசாரங்களை மேற்கொள்கிறது. ஆனால், அவர்களால் உண்மையுடன் போராட முடியாது. அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. அதை வைத்து அவர்களால் என்ன செய்ய முடியும்? உண்மையுடன் போராட முடியாது, அடக்க முடியாது என்றார்.
பாதுகாப்புகளை எப்படி செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் அதையொரு பிரச்னையாக மாற்றுகின்றனர்.
மேலும், ஆளும் பாஜக அரசின் தலைவர்கள் குண்டு துளைக்காத கார்களைத் தவிர்த்து, விதிமுறைகளை மீறிய சம்பவங்களையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார், ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மற்றும் வெவ்வேறு கட்சிகளுக்கு வெவ்வேறு விதிமுறைகள் இருப்பதாகக் கூறினார்.
"அவர்களின் தலைவர்கள் திறந்த ஜீப்பில் பேரணி நடத்தும்போது, விதிமுறைகளுக்கு எதிராக, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதில்லை. ராகுல் காந்தி தனது சொந்த பாதுகாப்பை மீறியதாகக் கூறி வழக்குத் தொடர முயற்சிக்கிறார்கள்," என்று அவர் கூறினார்,
இந்த நடைபயணம் இந்தியாவின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்றும், தனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினார்.
"நான் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கும்போது, எனக்கு எந்த முன்முடிவும் இல்லாமல் தொடங்கினேன். நான் பயணத்தை தொடர்ந்து செல்லச் செல்ல, அது வெறும் நடைப்பயணம் அல்ல அதைவிட மேலானது என்பதை உணர்ந்தேன், அது ஒரு உயிரினத்தைப் போன்ற உணர்வுகளைக் கொண்டிருந்தது. இது இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. உணர்ச்சிகள் மற்றும் நான் கற்பனை செய்ததை விட எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்துள்ளது,” என்று கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய 150 நாள் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து ராகுல் கூறினார்.
புதிய விதிகளை அமல்படுத்துவது குறித்த கட்சியின் முடிவெடுக்கும் செயல்முறை குறித்து பேசிய ராகுல், ராஜஸ்தானின் பழைய ஓய்வூதியக் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்துவது போன்றவற்றை காங்கிரஸ் கட்சி ஆளும் எந்த மாநிலமும் அறிமுகப்படுத்த விரும்பினால் அமல்படுத்தலாம். அதில் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிட மாட்டார்கள்.
வரவிருக்கும் 2024 தேர்தலில், பாஜவுக்கு எதிரான மாற்றுப் பார்வையில் வலிமையாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாகிவிடும். எதிர்க்கட்சிகள் மாற்றுப் பார்வையுடன் மக்களிடம் செல்ல வேண்டும். நாட்டில் தற்போது பாஜகவுக்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்பலை உள்ளது. "
வரவிருக்கும் 2024 தேர்தலில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? என செய்தியாளர்களின் கேள்விக்கு, வெறுப்புக்கு எதிராக தேசத்தை இணைப்பது மற்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அன்பு நிறைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம், கவனம் என ராகுல்காந்தி பதிலளித்தார்.
மேலும், எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் யாத்திரையில் இணைந்திருந்தனர். ஆனாலும், சில அரசியல் நிர்பந்தங்கள் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சுதந்திரமாக இருப்பதற்கு காங்கிரஸ் தடையாக இருக்காது.
இந்திய ஒற்றுமை நடைப்பயணம் எல்லோருக்கும் பொதுவானது. அதில் யார் கலந்துகொள்கிறார்கள், கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது. பொதுவாகவே அன்புக்கும் வெறுப்புக்கும் நிறைய இடைவெளியும், வேறுபாடும் இருக்கிறது. ஆனாலும் பலர் அன்பை பரப்பவே நினைக்கின்றனர். அகிலேஷ், மாயாவதி வெறுப்பை விரும்ப மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இந்த நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமே வெறுப்புக்கு எதிராக தேசத்தை இணைப்பதுதான். எங்களைப் பொறுத்தவரை இந்த நடைப்பயணம் வெற்றிகரமான ஒன்று. இதன்மூலம் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நான் புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்.
பாஜக, ஆர்எஸ்எஸ் இன்னும் வலிமையாக எங்களைத் தாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களைப் புரிந்து கொள்ள உதவும். நான் அவர்களை எனது ஆசிரியர்களாக கருதுகிறேன். நான் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை எனக்கு உணர்த்தி, அதற்கான பாதையை காட்டியுள்ளனர்” என்று ராகுல் காந்தி கூறினார்.
தொடர்ந்து தில்லி குளிரில் டி-ஷர்டுடன் நடப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு “நான் இன்னும் குளிரை உணரவில்லை. அப்படி உணரும்போது வேறு உடைகளை அணிவேன்” என்று ராகுல் பதில் அளித்தார். மேலும், “நடைப்பயணம் முடிந்ததும் இதுகுறித்த ரகசியத்தை விடியோவாக வெளியிடுவேன்” என்று ராகுல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...