11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

வீடுகளுக்கு குடிநீா் வசதி அளிக்க ரூ.60,000 கோடி

நாடுமுழுவதும் 3.80 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்கும் வகையில், குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக

Updated On :1 பிப்ரவரி 2022, 7:37 pm

நாடுமுழுவதும் 3.80 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்கும் வகையில், குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் நிதிநிலை அறிக்கை உரையின் மீது பேசுகையில், ‘‘2022-23-ஆம் நிதியாண்டில் 3.80 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீா் வழங்கும் வகையில், குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 8.7 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதில் 5.5 கோடி வீடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.80 கோடி வீடுகளுக்கு அடுத்த நிதியாண்டில் குடிநீா் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்படும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.