11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஈரான் போரால், எந்தெந்த பொருள்கள் ஏற்றுமதிக்கு பாதிப்பு?

ஈரான் போரால், கடல் உணவு, ஊட்டச்சத்து நிறைந்த மக்கானா ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது பற்றி..

News image

கடல்வழி ஏற்றுமதி - file photo

Updated On :9 ஏப்ரல் 2026, 6:54 am

ஈரான் போரால், பெட்ரோல், டீசல் வரத்து பாதிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களை நாடு எதிர்கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதாக தரவுகள் வெளியாகின்றன.

அண்மைக்காலமாக மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து நிறைந்த தாமரை விதைகள், ஏற்றுமதி ஈரான் போரால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனவாம்.

இதனுடன், ஈரான் போரால், பல்வேறு ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேற்காசிய நாடுகள் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வேளாண் பொருள்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பெரிய அளவில் பழங்கள் வெளிநாடுகளுக்கு கடல் வழியாக ஏற்றுமதியாகும் நிலையில், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு வேளாண் துறையினர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதிலும் பழங்களின் தேவை அதிகமாக இருக்கும் மாதத்திலிருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டது பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக வணிகர்கள் கூறுகிறார்கள்.

இந்த பழங்களின் வரிசையில், வாழைப்பழம், மாதுளை, மாம்பழம் என பல வகையான பழங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் வீணானதாகக் கூறப்படுகிறது.

மக்கான என்று எடுத்துக் கொண்டால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால், மக்கானா தேவை குறைந்து, 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பிகார் மாநில வணிகர்கள் கூறுகிறார்கள்.

ஈரான் போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், வெறும் பெட்ரோல், டீசல்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டாம். பல ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தாகி, மக்கானா ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கானா உற்பத்தியாளர்களுக்கு ரூ.500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

தற்போது, பிகாரிலிருந்து மக்கானா, அரிசி மற்றும் காய்கறிகள் பெரிய அளவில் ஏற்றுமதி நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்தால் ஏற்றுமதி தொடங்கும் என்ற நம்பிக்கையோடு வர்த்தகர்கள் உள்ளனர். பிகாரிலிருந்து பெரும்பாலான பொருள்கள் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், கத்தார் போன்றவற்றுக்கு மக்கானா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட வருகிறது. இது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடல் உணவு எற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது மிகப்பெரிய மீன், எறா போன்ற கடல் உணவுகள் இந்தியாவிலிருந்து மேற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது போக்குவரத்து செலவு அதிகரித்து, ஏற்றுமதி செய்வதே நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியிருப்பதாகவும் வணிகர்கள் கூறுகிறார்கள்.

Summary

About the impact of the Iran war on seafood and nutritious makhana exports.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.